Thiruppugazh Olamittu iraiththu ஓலமிட்டு இரைத்து
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
ஓலமிட்டு இரைத்து (நாகப்பட்டினம்)
முருகா!
உன்னையே பணிந்து முத்தி பெற அருள்வாய்.
தான தத்த தத்த தந்த
தான தத்த தத்த தந்த
தான தத்த தத்த தந்த ...... தனதான
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த
வேலை வட்ட மிட்ட இந்த
ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென்
றூம ரைப்ர சித்த ரென்று
மூட ரைச்ச மர்த்த ரென்றும்
ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற்
கோல முத்த மிழ்ப்ர பந்த
மால ருக்கு ரைத்த நந்த
கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன்
கோப மற்று மற்று மந்த
மோக மற்று னைப்ப ணிந்து
கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே
வாலை துர்க்கை சக்தி யம்பி
லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே
வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம்
வீழ நெட்ட யிற்று ரந்த
வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா
ஞால வட்ட முற்ற வுண்டு
நாக மெத்தை யிற்று யின்ற
நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட
சூர பத்ம னைக்க ளைந்த
நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஓலம் இட்டு இரைத்து எழுந்த
வேலை வட்டம் இட்ட இந்த
ஊர் முகில் தருக்கள் ஒன்றும் .....அவர் ஆர்என்றும்,
ஊமரை ப்ரசித்தர் என்றும்,
மூடரைச் சமர்த்தர் என்றும்,
ஊனரை ப்ரபுக்கள் என்றும், ...... அறியாமல்
கோல முத்தமிழ் ப்ரபந்தம்
மாலருக்கு உரைத்து, அநந்த
கோடி இச்சை செப்பி, வம்பில் ...... உழல்நாயேன்,
கோபம் அற்று, மற்றும் அந்த
மோகம் அற்று, உனைப் பணிந்து
கூடுதற்கு முத்தி என்று ...... தருவாயே?
வாலை, துர்க்கை, சக்தி, அம்பி,
லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது, பெற்று எடுத்து உகந்த ...... சிறியோனே!
வாரி பொட்டு எழ, க்ரவுஞ்சம்
வீழ, நெட்டு அயில் துரந்த
வாகை மல் புய! ப்ரசண்ட ...... மயில்வீரா!
ஞால வட்டம் முற்ற உண்டு,
நாக மெத்தையில் துயின்ற
நாரணற்கு அருள் சுரந்த ...... மருகோனே!
நாலு திக்கும் வெற்றி கொண்ட
சூர பத்மனைக் களைந்த
நாகபட்டினத்து அமர்ந்த ...... பெருமாளே.
Comments
Post a Comment