moola manthiram odal Thiruppugazh

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
மூல மந்திரம் (பழநி)
பழநியப்பா! மெய்யடியார் உறவை அருள்

தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான


மூல மந்திர மோத லிங்கிலை
     யீவ திங்கிலை நேய மிங்கிலை
          மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள்

மோக முண்டதி தாக முண்டப
     சார முண்டப ராத முண்டிடு
          மூக னென்றோரு பேரு முண்டருள் ...... பயிலாத

கோல முங்குண வீன துன்பர்கள்
     வார்மை யும்பல வாகி வெந்தெழு
          கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக்

கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
     ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
          கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே

பீலி வெந்துய ராலி வெந்தவ
     சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
          பீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடு

பேணி யங்கெதி ராறு சென்றிட
     மாற னும்பிணி தீர வஞ்சகர்
          பீறு வெங்கழு வேற வென்றிடு ...... முருகோனே

ஆல முண்டவர் சோதி யங்கணர்
     பாக மொன்றிய வாலை யந்தரி
          ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா

ஆர ணம்பயில் ஞான புங்கவ
     சேவ லங்கொடி யான பைங்கர
          ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மூல மந்திரம் ஓதல் இங்கு இலை,
     ஈவது இங்கு இலை, நேயம் இங்கு இலை,
          மோனம் இங்கு இலை, ஞானம் இங்கு இலை, ......  மடவார்கள்

மோகம் உண்டுதி தாகம் உண்டுப-
     சாரம் உண்டுபராதம் உண்டுடு
          மூகன் என்று ஒரு பேரும் உண்டுருள் ...... பயிலாத

கோலமும்குண ஈன துன்பர்கள்
     வார்மையும்பல ஆகி, வெந்து எழு
          கோர கும்பியிலே விழுந்திட ...... நினைவாகி,

கூடு கொண்டு உழல்வேனை, அன்பொடு
     ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு
          கூர்மை தந்துனி ஆள வந்துருள் ......புரிவாயே.

பீலி வெந்துயர் ஆலி வெந்து,
     அசோகு வெந்துமண் மூகர் நெஞ்சிடை
          பீதி கொண்டிட, வாது கொண்டு,ருள் ......எழுதுஏடு

பேணி அங்குதிர் ஆறு சென்றிட,
     மாறனும் பிணி தீர, வஞ்சகர்
          பீறு வெங்கழு ஏற, வென்றிடு ...... முருகோனே!

ஆலம் உண்டவர், சோதி அம் கணர்,
     பாகம் ஒன்றிய வாலைந்தரி,
          ஆதி அந்தமும் ஆன சங்கரி ...... குமரஈசா!

ஆரணம் பயில் ஞான புங்கவ!
     சேவல் அம் கொடி ஆன பைங்கர!
          ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் ...... பெருமாளே.

Comments

Popular posts from this blog

Murugavel panniru Thirumurai

Lord Muruga 1000 names

alagu il avuNarai Thiruppugazh அலகு இல் அவுணரை திருப்புகழ்

paalo thaeno Thiruppugazh பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) திருப்புகழ்