Posts

Showing posts from September, 2024

Thiruppugazh giRimozhi கிறி மொழி

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கிறிமொழிக் கிருதரை (திருத்தணிகை) திருத்தணிகை வேலா!திருவடியில் அணுக அருள். தனதனத் தனதனத் தனதனத்  தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான ......... பாடல் ......... கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக் கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக் கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க் கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும் அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற் றறவுநெக் கழிகருக் ...... கடலூடே அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற் றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப் பொறியிலச் சமணரத் ...... தனைபேரும் பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப் புகலியிற் கவுணியப் ...... புலவோனே தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித் தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந் தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத் தணியினிற் சரவணப் ...... பெருமாளே. பதம் பிரித்தல் கிறிமொழிக் கிருதரை ,  பொறிவழிச் செறிஞரை ,      கெடுபிறப்பு அற விழிக் ...... கிற பார்வைக் கெடு மடக் குருடரை ,  திருடரை ...

Thiruppugazh venkaalam baanam

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்) மாதர் மயலாகிய துன்பம் தீர வந்து ஆட்கொள்ள வேண்டல் தந்தா தந்தா தந்தா தந்தா தந்தா தந்தத் ...... தனதான வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் ...... படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய் கொங்கார் பைந்தே னுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் ...... கினியோனே குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ ரும்போய் மங்கப் ...... பொருகோபா கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார் கன்றே வும்பர்க் ...... கொருநாதா கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் ...... பெருமாளே. பதம் பிரித்தல் வெங்காளம் பாணம் சேல் கண், பால் மென்பாகு அம்சொல், ...... குயில்மாலை மென்கேசம் தான், என்றே கொண்டார், மென் தோள் ஒன்றப் ...... பொருள்தேடி, வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப் ...... படல் ஆமோ? மைந்து ஆரும் தோள் மைந்தா! அந்தா! வந்தே இந்தப் ...... பொழுது ஆள்வாய்...

Thiruppugazh aththan annai

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அத்தன் அன்னை (சிதம்பரம்) சிதம்பர முருகா! பிறவித் துன்பம் நீங்க அருள். தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய      தத்த தன்ன தய்ய ...... தனதான அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி      அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல      லற்று நின்னை வல்ல ...... படிபாடி முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி      முத்த னென்ன வுள்ள ...... முணராதே முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு      முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு      தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய      சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும் பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி      பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள      பச்சை மஞ்ஞை வல்ல ......