Thiruppugazh gugane gurubarane குகனே குருபரனே
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குகனே குருபரனே (சிதம்பரம்) சிதம்பர முருகா! அடியேனுடைய வினைகளும் நோயும் அற்று ஒழிய மயில் மீது வந்து அருள். தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தந்தத் ...... தனதான குகனெ குருபர னேயென நெஞ்சிற் புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக் கொடிய இருவினை மூலமும் வஞ்சக் கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப் பகலு மிரவுமி லாவெளி யின்புக் குறுகி யிணையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப் பவள மனதிரு மேனியு டன்பொற் சரண அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய் தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம் தபலை திமிலைகள் பூரிகை பம்பைக் கரடி தமருகம் வீணைகள் பொங்கத் தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் ககன மறைபட ஆடிய செம்புட் பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக் கடல...