108 namo nama of Lord Muruga

 The below 108 "namo nama" - salutations to Lord Muruga are given in various Thiruppugazh songs. These 108 selections are culled out by Thirumuruga Kribananda variya Swamigal. Chanting these names will invoke the Grace & Blessings of Lord Muruga. 

  1. போத நிர்க்குண போதா நமோநம
  2. நாத நிஷ்கள நாதா நமோநம
  3. பூரணக்கலை சாரா நமோநம
  4. பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம
  5. நீப புஷ்பக தாளா நமோநம
  6. போக சொர்க்க புபாலா நமோநம
  7. சங்கமேறும் மா தமிழ்த்ரய சேயே நமோநம
  8. வேதனத்ரய வேளே நமோநம
  9. வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம
  10. வேத வித்தகா சாமீ நமோநம
  11. வேல் மிகுத்த மாசூரா நமோநம
  12. வீம சக்ரயூ காளா நமோநம
  13. விந்துநாத வீர பத்மசீர் பாதா நமோநம
  14. நீலமிக்க கூதாளா நமோநம
  15. மேகம் ஒத்த மாயூரா நமோநம
  16. விண்டிடாத போதம் ஒத்தபேர் போதா நமோநம
  17. பூத மற்றுமே யானாய் நமோநம
  18. பூரணத்துளே வாழ்வாய் நமோநம
  19. துங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம
  20. ஆறிரட்டி நீள் தோளா நமோநம
  21. பூஷணத்துமா மார்பா நமோநம
  22. ஆர்யை பெற்ற சீராளா நமோநம
  23. சூரையட்டு நீள் பேரா நமோநம
  24. ஆரணத்தினார் வாழ்வே நமோநம
  25. சீதள வாரிஜ பாதா நமோநம
  26. நாரத கீத விநோதா நமோநம
  27. சேவல மாமயில் ப்ரீதா நமோநம
  28. மறைதேடுஞ் சேகரமானப்ர தாபா நமோநம
  29. ஆகம சார சொரூபா நமோநம
  30. தேவர்கள் சேனை மகீபா நமோநம
  31. கதிதோயப் பாதக நீவு குடாரா நமோநம
  32. மா அசுரேச கடோரா நமோநம
  33. பாரினிலே ஜய வீரா நமோநம
  34. மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோநம
  35. நாவல ஞான மனஉலா நமோநம
  36. பாலகுமாரசுவாமீ நமோநம
  37. நாத விந்து கலாதீ நமோநம
  38. வேத மந்த்ர சொரூபா நமோநம
  39. ஞான பண்டித ஸாமீ நமோநம
  40. வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம
  41. போக அந்தரி பாலா நமோநம
  42. நாக பந்த மயூரா நமோநம
  43. பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம
  44. கீத கிண்கிணி பாதா நமோநம
  45. தீர சம்ப்ரம வீரா நமோநம
  46. தீப மங்கள ஜோதீ நமோநம
  47. தூய அம்பல லீலா நமோநம
  48. தேவ குஞ்சரி பாகா நமோநம
  49. போத கந்தரு கோவே நமோநம
  50. நீதி தங்கிய தேவா நமோநம
  51. பூத லந்தனை யாள்வாய் நமோநம
  52. பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம
  53. வேடர் தங்கொடி மாலா நமோநம
  54. போதவன்புகழ் சாமீ நமோநம
  55. அரிதான வேத மந்திர ரூபா நமோநம
  56. ஞான பண்டித நாதா நமோநம
  57. வீர கண்டைகொள் தாளா நமோநம
  58. அழகான மேனி தங்கிய வேளே நமோநம
  59. வான பைந்தொடி வாழ்வே நமோநம
  60. வீறு கொண்டவிசாகா நமோநம
  61. சிவசிவ ஹரஹர தேவா நமோநம
  62. தெரிசன பரகதி யானாய் நமோநம
  63. திசையினு மிசையினும் வாழ்வே நமோநம
  64. திருதரு கலவி மணாளா நமோநம
  65. திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
  66. ஜெயஜெய ஹரஹர தேவா நமோநம
  67. உம்பர்கள் ஸ்வாமி நமோநம
  68. எம்பெரு மானே நமோநம
  69. ஒண்டொடி மோகா நமோநம
  70. சரவண ஜாதா நமோநம
  71. கருணைய தீதா நமோநம
  72. சததள பாதா நமோநம
  73. தருணக தீரா நமோநம 
  74. நிருபமர் வீரா நமோநம 
  75. சமதள வூரா நமோநம 
  76. பரம சொரூபா நமோநம 
  77. சுரர்பதி பூபா நமோநம 
  78. பரிமள நீபா நமோநம 
  79. பகவதி பாலா நமோநம 
  80. இகபர மூலா நமோநம 
  81. பவுருஷ சீலா நமோநம 
  82. சத்தி பாணீ நமோநம 
  83. முத்தி ஞானீ நமோநம 
  84. தத்வ வாதீ நமோநம
  85. விந்துநாத சத்து ரூபா நமோநம
  86. ரத்ந தீபா நமோநம
  87. தற்ப்ர தாபா நமோநம
  88. சிங்கார ரூபமயில் வாகன நமோநம
  89. கந்தா குமாரசிவ தேசிக நமோநம
  90. சிந்தூர பார்வதி சுதாகர நமோநம
  91. விருதோதை சிந்தான சோதிகதிர் வேலவ நமோநம
  92. கங்காள வேணிகுரு வானவ நமோநம
  93. அரிமருகோனே நமோநம
  94. அறுதியிலானே நமோநம
  95. அறுமுக வேளே நமோநம
  96. அரகர சேயே நமோநம
#########################
  1. போத நிர்க்குண போதா நமோநம ... ஞானம் நிறைந்தவனாய், குணங்களுக்கு எட்டாமல் இருக்கும் ஞானமூர்த்தியே, போற்றி, போற்றி
  2. நாத நிஷ்கள நாதா நமோநம ... தலைவனே, உருவம் அற்ற மூர்த்தியே, போற்றி, போற்றி
  3. பூரணக்கலை சாரா நமோநம ... எல்லாக் கலைகளின் சாரமாக உள்ள தெய்வமே, போற்றி, போற்றி
  4. பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம ... ஐந்து மலர்க்கணைகளை உடைய அரசன் மன்மதனின் மைத்துனனாம் அரசனே, போற்றி, போற்றி 
  5. நீப புஷ்பக தாளா நமோநம ... கடப்ப மலர்களைத் தரித்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி
  6. போக சொர்க்க புபாலா நமோநம ... இன்பங்களுக்கு உரிய சொர்க்க பூமியைக் காத்தவனே, போற்றி, போற்றி
  7. சங்கமேறும் மா தமிழ்த்ரய சேயே நமோநம ... சங்கப்பலகையில் ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி
  8. வேதனத்ரய வேளே நமோநம ... ரிக், யசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களும் தொழும் தெய்வமே, போற்றி, போற்றி
  9. வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம ... வாழ்கின்ற பூலோகம், அந்தரம், சுவர்க்கம் என்ற மூவுலகங்களும் போற்றும் செல்வமே, போற்றி, போற்றி 
  10. வேத வித்தகா சாமீ நமோநம ... வேதங்கள் உணர்ந்த பேரறிவாளனே, ஸ்வாமியே, போற்றி, போற்றி
  11. வேல் மிகுத்த மாசூரா நமோநம ... வேலினைச் சிறப்பாக ஏந்தும் மஹா சூரனே, போற்றி, போற்றி
  12. வீம சக்ரயூ காளா நமோநம ... அச்சம் தரும் சக்ரவியூகத்தை போரிலே எடுப்பவனே, போற்றி, போற்றி
  13. விந்துநாத ... ஆவுடையாகவும் லிங்கமாகவும் சிவசக்தி உருவமாக விளங்குபவனே ; வீர பத்மசீர் பாதா நமோநம ... வீரனே, தாமரை போன்ற அழகிய திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி
  14. நீல மிக்ககூ தாளா நமோநம ... நீல நிறத்தில் மிகுந்த கூதளப்பூமாலைகள் அணிந்தவனே, போற்றி, போற்றி
  15. மேகம் ஒத்த மாயூரா நமோநம ... மேக நிறம் கொண்டுள்ள மயில் வாகனனே, போற்றி, போற்றி
  16. விண்டிடாத போதம் ஒத்தபேர் போதா நமோநம ... சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானப் பொருளே, போற்றி, போற்றி
  17. பூத மற்றுமே யானாய் நமோநம ... பஞ்ச பூதங்களாயும் பிறவாயும் ஆனவனே, போற்றி, போற்றி 
  18. பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ... பரிபூரணப் பொருளாக வாழ்பவனே, போற்றி, போற்றி
  19. துங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம ... பரிசுத்தமான மலைகளில் எல்லாம் வாழ்பவனே, போற்றி, போற்றி
  20. ஆறி ரட்டிநீள் தோளா நமோநம ... பன்னிரண்டு நீண்ட புஜங்களை உடையவனே, போற்றி, போற்றி
  21. பூஷணத்துமா மார்பா நமோநம ... ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பனே, போற்றி, போற்றி
  22. ஆர்யை பெற்ற சீராளா நமோநம ... மஹாதேவி பெற்ற சீராளனே, போற்றி, போற்றி
  23. சூரை யட்டுநீள் பேரா நமோநம ... சூரனை வதைத்துப் பேரும் புகழும் பெற்றவனே, போற்றி, போற்றி
  24. ஆரணத்தினார் வாழ்வே நமோநம ... வேதம் ஓதுவோர்களின் செல்வமே, போற்றி, போற்றி
  25. சீதள வாரிஜ பாதா நமோநம ... குளிர்ந்த தாமரை மலர்ப் பாதனே போற்றி, போற்றி
  26. நாரத கீத விநோதா நமோநம ... நாரதருடைய இசையில் மகிழ்பவனே, போற்றி, போற்றி
  27. சேவல மாமயில் ப்ரீதா நமோநம ... சேவற்கொடியோனே, சிறந்த மயில்மீது பிரியமானவனே, போற்றி, போற்றி
  28. மறைதேடுஞ் சேகரமானப்ர தாபா நமோநம ... வேதங்கள் தேடும் அழகான கீர்த்தியை உடையோனே, போற்றி, போற்றி
  29. ஆகம சார சொரூபா நமோநம ... ஆகமங்களின் சார ஸ்வரூபமாக உள்ளவனே, போற்றி, போற்றி
  30. தேவர்கள் சேனை மகீபா நமோநம ... தேவர்களின் சேனைக்குத் தலைவனே, போற்றி, போற்றி
  31. கதிதோயப் பாதக நீவு குடாரா நமோநம ... நற்கதி அடைய, பாதகத்தைப் பிளக்கும் கோடாரியே, போற்றி, போற்றி
  32. மா அசுரேச கடோரா நமோநம ... பெரிய அசுரர்கள் அஞ்சும்படியாக கொடுமை காட்டுபவனே, போற்றி, போற்றி
  33. பாரினிலே ஜய வீரா நமோநம ... இவ்வுலகிலே ஜயவீரனாக விளங்குபவனே, போற்றி, போற்றி
  34. மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோநம ... மலைமகள் பார்வதி பெற்றெடுத்த செல்வமே, போற்றி, போற்றி
  35. நாவல ஞான மனஉலா நமோநம ... வாக்கிலே வித்தகனே, ஞான மனத்தில் உலவுகின்றவனே, போற்றி, போற்றி
  36. பாலகுமாரசுவாமீ நமோநம... பாலகுமாரசுவாமீ, போற்றி, போற்றி
  37. நாத விந்து கலாதீ நமோநம ... லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி, 
  38. வேத மந்த்ர சொரூபா நமோநம ... வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி, 
  39. ஞான பண்டித ஸாமீ நமோநம ... பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி, 
  40. வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம ... பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி
  41. போக அந்தரி பாலா நமோநம ... (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி 
  42. நாக பந்த மயூரா நமோநம ... தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி, 
  43. பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம ... எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி, 
  44. கீத கிண்கிணி பாதா நமோநம ... இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி 

  45. தீர சம்ப்ரம வீரா நமோநம ... மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி 
  46. தீப மங்கள ஜோதீ நமோநம ... திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி, 
  47. தூய அம்பல லீலா நமோநம ... பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி, 
  48. தேவ குஞ்சரி பாகா நமோநம ... தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி
  49. போத கந்தரு கோவே நமோநம ... ஞான உபதேசம் தருகிற தலைவனேபோற்றிபோற்றி

  50. நீதி தங்கிய தேவா நமோநம ... நீதிக்கு இருப்பிடம் ஆன இறைவனேபோற்றிபோற்றி
  51. பூத லந்தனை யாள்வாய் நமோநம ... இந்தப் பூமண்டலத்தை ஆள்கின்றவனேபோற்றிபோற்றி
  52. பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம ... அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானேபோற்றிபோற்றி,
  53. வேடர் தங்கொடி மாலா நமோநம ... வேடர்கள் தம்குலத்தில் அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனேபோற்றிபோற்றி
  54. போதவன்புகழ் சாமீ நமோநம ... தாமரை மலர்வாசனாம் பிரமன் துதிக்கும் ஸ்வாமியேபோற்றிபோற்றி
  55. அரிதான வேத மந்திர ரூபா நமோநம ... அருமையான வேத மந்திரங்களின் வடிவானவனேபோற்றிபோற்றி
  56. ஞான பண்டித நாதா நமோநம ... மெய்ஞ்ஞானப் புலவனான தலைவனேபோற்றிபோற்றி
  57. வீர கண்டைகொள் தாளா நமோநம ... வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவனேபோற்றிபோற்றி
  58. அழகான மேனி தங்கிய வேளே நமோநம ... அழகு நிறைந்த திருமேனியை உடைய வேளேபோற்றிபோற்றி
  59. வான பைந்தொடி வாழ்வே நமோநம ... தேவருலகில் வாழும் பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனேபோற்றிபோற்றி
  60. வீறு கொண்டவிசாகா நமோநம ... வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியேபோற்றிபோற்றி
  61. சிவசிவ ஹரஹர தேவா நமோநம ... சிவசிவ ஹரஹர தேவா,போற்றி, போற்றி
  62. தெரிசன பரகதி யானாய் நமோநம ... கண்டு களிக்க வேண்டிய மேலான கதிப் பொருளானாய், போற்றி, போற்றி
  63. திசையினும் இசையினும் வாழ்வே நமோநம ... எல்லாத் திசைகளிலும், இசைகளிலும் வாழ்பவனே, போற்றி, போற்றி
  64. திருதரு கலவி மணாளா நமோநம ... வள்ளிநாயகியின் இன்ப மணவாளனே, போற்றி, போற்றி
  65. திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம ... திரிபுரத்தை எரித்த தலைவனே, போற்றி, போற்றி
  66. ஜெயஜெய ஹரஹர தேவா நமோநம... ஜெயஜெய ஹரஹர தேவா போற்றி போற்றி
  67. உம்பர்கள் ஸ்வாமி நமோநம ... தேவர்களின் ஸ்வாமியே போற்றி, போற்றி
  68. எம்பெருமானே நமோநம ... எங்கள் பெருமானே போற்றி, போற்றி
  69. ஒண்டொடி மோகா நமோநம ... ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி
  70. சரவண ஜாதா நமோநம ... நாணல் வனம் சூழ்ந்த பொய்கையில் அவதரித்தவனே, போற்றி போற்றி
  71. கருணை அதீதா நமோநம ... கருணை எல்லை கடந்த பொருளே, போற்றி போற்றி 
  72. சததள பாதா நமோநம ... நூறு இதழ்கள் கொண்ட தாமரை போன்ற திருவடி உடையவனே, போற்றி போற்றி
  73. தருணக தீரா நமோநம ... இளமையும் தைரியமும் உடையவனே, போற்றி போற்றி
  74. நிருப அமர் வீரா நமோநம ... தலைமைச் சேனாதிபதியாகிய போர் வீரனே, போற்றி போற்றி
  75. சமதள வூரா நமோநம ... போருக்குரிய சேனைகள் உள்ள ஊராகிய திருப்போரூரானே, போற்றி போற்றி,
  76. பரம சொரூபா நமோநம ... உயர்ந்த ஞான வடிவு கொண்டவனே, போற்றி போற்றி
  77. சுரர்பதி பூபா நமோநம ... தேவர்கள் தலைவனாம் இந்திரனுக்கும் அரசனே, போற்றி போற்றி
  78. பரிமள நீபா நமோநம ... நறுமணம் வீசும் கடம்பமாலையை அணிந்தவனே, போற்றி போற்றி
  79. பகவதி பாலா நமோநம ... உமை, காளி, பகவதி எனப்படும் பார்வதி மைந்தா, போற்றி போற்றி
  80. இகபர மூலா நமோநம ... இம்மைக்கும் மறுமைக்கும் மூலகாரணமாக இருப்பவனே, போற்றி போற்றி
  81. பவுருஷ சீலா நமோநம ... ஆண்மையும் குணநலன்களும் உடையவனே, போற்றி போற்றி
  82. சத்தி பாணீ நமோநம ... ஞான சக்தி வேலைக் கரத்தில் ஏந்தியவனே, போற்றி போற்றி
  83. முத்தி ஞானீ நமோநம ... முக்தியைத் தரவல்ல ஞான பண்டிதா, போற்றி போற்றி
  84. தத்வ ஆதீ நமோநம ... தத்துவங்களுக்கு முதல்வனாய் நிற்பவனே, போற்றி போற்றி
  85. விந்துநாத சத்து ரூபா நமோநம ... சிவதத்துவமாகிய விந்து, சக்தி தத்துவமாகிய நாதம் இரண்டிற்கும் சத்தான உண்மை உருவம் வாய்த்தவனே, போற்றி போற்றி
  86. ரத்ந தீபா நமோநம ... மணிவிளக்கைப் போல் ஒளிர்பவனே, போற்றி போற்றி
  87. தற்ப்ரதாபா நமோநம ... தனக்குத் தானே நிகரான கீர்த்தியை உடையவனே, போற்றி போற்றி
  88. சிங்கார ரூபமயில் வாகன நமோநம ... அலங்கார உருவத்தனே, மயில் வாகனனே, போற்றி, போற்றி
  89. கந்தாகுமாரசிவ தேசிக நமோநம ... கந்தனே, குமரனே, குருநாதனே, போற்றி, போற்றி
  90. சிந்தூர பார்வதி சுதாகர நமோநம ... குங்குமம் அணிந்த பார்வதியின் பிள்ளையாய் அமைந்தவனே போற்றி, போற்றி
  91. விருதோதை சிந்தான சோதிகதிர் வேலவ நமோநம ... வெற்றிச் சின்னங்களின் ஓசைகள் கடல் போல முழங்க ஜோதி ரூபம் கொண்ட வேலாயுதனே போற்றி, போற்றி
  92. கங்காள வேணிகுருவானவ நமோநம ... எலும்பு மாலைகளை அணிந்தவரும், ஜடாமுடி உடையவருமான சிவபிரானுக்கு குருநாதன் ஆனவனே போற்றி, போற்றி
  93. அரிமருகோனே நமோநம ... திருமாலின் மருமகனே போற்றி
  94. அறுதியிலானே நமோநம ... முடிவு என்பது அற்றவனே போற்றி
  95. அறுமுக வேளே நமோநம ... ஆறுமுகக் கடவுளே போற்றி
  96. உனபாதம் அரகர சேயே நமோநம ... உனது பாதத்தில், பாவம் தீர்க்கும் சிவன் மகனே போற்றி
  97. இமையவர் வாழ்வே நமோநம ... தேவர்களின் செல்வமே போற்றி
  98. அருண சொரூபா நமோநம ... செந்நிறத்துச் சொரூபனே போற்றி
  99. ஓம் தென்பரங் குன்றுறை தேவே நமோ நம
  100. ஓம் செந்திலம் பதிவளர் சேயே நமோ நம
  101. ஓம் தென்பழநிமலை மேவு தீரா நமோ நம
  102. ஓம் திருவேரகத்திலுறை தேனே நமோ நம
  103. ஓம் குன்றுதோறாடல்புரி குமரா நமோ நம
  104. ஓம் பழமுதிர் சோலைவளர் பதியே நமோ நம
  105. ஓம் மயில்மிசை வருமொரு வரதா நமோ நம
  106. ஓம் சேகர வாரண வேல்வீரா நமோ நம
  107. ஓம் மைவருங் கண்டத்தர் மைந்தா நமோ நம
  108. ஓம் குருவாய் வருவாய் குகனே நமோ நம

Comments

Popular posts from this blog

Murugavel panniru Thirumurai

Lord Muruga 1000 names

Chinmaya Mission Tiruvallur

alagu il avuNarai Thiruppugazh அலகு இல் அவுணரை திருப்புகழ்