Interview with Swami Chinmayananda, translated into Thamizh
குருதேவருடன் பத்திரிக்கையாளர் டேவிட் ஸ்நோ நடத்திய பேட்டி University of Sandiego, Sandiego CA 1992 இல் பல்கலைகழக சுற்றுப்பயணத்தின் போது கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் கார்டியன் பத்திரிக்கையாளருக்குக் கொடுத்த பேட்டியின் சில பகுதிகள் இங்கே. மொழிப்பெயர்த்தவர் - Dr. S.வத்ஸலா, Chinmaya Gardens, Coimbatore டேவிட் ஸ்நோ : இந்த உரையாடலை நான் ஒலிப்பதிவு செய்யலாமா ? சுவாமி சின்மயாநந்தர் : நான் எதையும் ரகசியமாக சொல்வதில்லை . டேவிட் ஸ்நோ : உங்களுடைய புத்தகங்களில் நீங்கள் கற்றுத்தரும் கருத்துக்கள் மற்ற எல்லா உலக மதங்களையும் வெகுவாக மதிக்க கற்றுத்தரும் என்று குறிப்பிடுகிறீர்கள் . அது எப்படி ? சுவாமி சின்மயாநந்தர் : ஏனெனில் பேதங்கள் என்பது, கடைபிடிக்கும் சடங்குகளிலும் தொழுகைக்கென கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களின் அமைப்பிலும்தான் இருக்கின்றன . ஒரு கோவில் போல, சர்ச் இருப்பது இல்லை . சர்ச் போல மசூதி கட்டப்ப...