Posts

Thiruppugazh Olamittu iraiththu ஓலமிட்டு இரைத்து

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஓலமிட்டு இரைத்து (நாகப்பட்டினம்) முருகா! உன்னையே பணிந்து முத்தி பெற அருள்வாய். தான தத்த தத்த தந்த      தான தத்த தத்த தந்த          தான தத்த தத்த தந்த ...... தனதான ஓல மிட்டி ரைத்தெ ழுந்த      வேலை வட்ட மிட்ட இந்த          ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென் றூம ரைப்ர சித்த ரென்று      மூட ரைச்ச மர்த்த ரென்றும்          ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற் கோல முத்த மிழ்ப்ர பந்த      மால ருக்கு ரைத்த நந்த          கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன் கோப மற்று மற்று மந்த      மோக மற்று னைப்ப ணிந்து          கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே வாலை துர்க்கை சக்தி யம்பி      லோக கத்தர் பித்தர் பங்கில்          மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம்      வீழ நெட்ட யிற்று ரந்த          வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா ஞால வட்ட முற்ற வுண்டு      நாக மெத்தை யிற்று யின்ற          நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே நாலு திக்கும் வெற்றி கொண்ட      சூர பத்ம னைக்க ளைந்த          நாக பட்டி னத்த மர்ந்த ......

moola manthiram odal Thiruppugazh

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூல மந்திரம் (பழநி) பழநியப்பா! மெய்யடியார் உறவை அருள் தான தந்தன தான தந்தன      தான தந்தன தான தந்தன           தான தந்தன தான தந்தன ...... தனதான மூல மந்திர மோத லிங்கிலை      யீவ திங்கிலை நேய மிங்கிலை           மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள் மோக முண்டதி தாக முண்டப      சார முண்டப ராத முண்டிடு           மூக னென்றோரு பேரு முண்டருள் ...... பயிலாத கோல முங்குண வீன துன்பர்கள்      வார்மை யும்பல வாகி வெந்தெழு           கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை யன்பொடு       ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு           கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே பீலி வெந்துய ராலி வெந்தவ      சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை           பீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடு பேணி யங்கெதி ராறு சென்றிட      மாற னும்பிணி தீர வஞ்சகர்           பீறு வெங்கழு வேற வென்றிடு ...... முருகோனே ஆல முண்டவர் சோதி யங்கணர்      பாக மொன்றிய வாலை யந்தரி           ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா ஆர ணம்பயில் ஞான புங்கவ      சேவ லங்கொடி யான பைங்கர           ஆவி

alagu il avuNarai Thiruppugazh அலகு இல் அவுணரை திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அலகுஇல் அவுணரை (மதுரை) முருகா! உம்மையே நினைந்து உருகும் அன்பை  அடியேனுக்குத் தந்து அருள் புரிவீர்.     தனதன தனனத் தந்த தானன      தனதன தனனத் தந்த தானன      தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான     அலகில வுணரைக் கொன்ற தோளென      மலைதொளை யுருவச் சென்ற வேலென      அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டரீக   அடியென முடியிற் கொண்ட கூதள      மெனவன சரியைக் கொண்ட மார்பென      அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ   கலகல கலெனக் கண்ட பேரொடு      சிலுகிடு சமயப் பங்க வாதிகள்      கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்   கலைகளு மொழியப் பஞ்ச பூதமு      மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன      கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்   இலகுக டலைகற் கண்டு தேனொடு      மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்      இனிமையி னுகருற் றெம்பி ரானொரு .......கொம்பினாலே   எழுதென மொழியப் பண்டு பாரதம்      வடகன சிகரச் செம்பொன் மேருவில்      எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ   வலம்வரு மளவிற் சண்ட மாருத      விசையினும் விசையுற் றெண்டி சாமுக      மகிதல மடையக் கண

avasiyam un vEndi Thiruppugazh அவசியம் உன்வேண்டி திருப்புகழ்

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அவசியம் உன்வேண்டி (திருமுருகன்பூண்டி) முருகா! உனது சரணத்தைப் பற்றி இருக்க அருள்.   தனதனனந் தாந்தத் ...... தனதான   அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச் சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய் சடுசமயங் காண்டற் ...... கரியானே சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.   பதம் பிரித்தல்     அவசியம் உன் வேண்டிப் ...... பலகாலும் , அறிவின் உணர்ந்து ஆண்டுக்கு ......ஒருநாளில் , தவ செபமும் தீண்டிக் ...... கனிவு ஆகி , சரணம் அதும் பூண்டற்கு ...... அருள்வாயே.   சவதமொடும் தாண்டித் ...... தகர் ஊர்வாய்! சடுசமயம் காண்டற்கு ...... அரியானே! சிவகுமர! அன்பு ஈண்டில் ...... பெயரானே! திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

paalo thaeno Thiruppugazh பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) திருப்புகழ்

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) முருகா! தாய் (தந்தை) மனம் மகிழ வாழ்ந்து ஈடேற அருள்வாய். தானா தானா தானா தானா      தானா தானத் ...... தனதான பாலோ தேனோ பாகோ வானோர்      பாரா வாரத் ...... தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ      பானோ வான்முத் ...... தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே      தாய்மார் நேசத் ...... துனுசாரந் தாரா தேபே ரீயா தேபே      சாதே யேசத் ...... தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாண்மா      லானா தேனற் ...... புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா      ஆளா வேளைப் ...... புகுவோனே சேலோ டேசே ராரால் சாலார்      சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே      தேவே தேவப் ...... பெருமாளே. பதம் பிரித்தல் பாலோ ?  தேனோ ?  பாகோ ?  வானோர்      பாராவாரத்து ...... அமுதேயோ ? பாரோர் சீரோ ?  வேளேர் வாழ்வோ ?      பானோ ?  வான்முத்து ...... என , நீளத் தாலோ தாலேலோ பாடாதே ,      தாய்மார் நேசத்து ...... உனு சாரம் தாராதே ,  பேர் ஈயாதே ,  பே-      சாதே ,   ஏசத் ...... தகுமோதான் ? ஆலஓல் கேளா ,  மேல்ஓர் நாள் ,   மால்      ஆனாது ,  ஏனல் ...... புனமேபோய