Lord Muruga 1000 names
Hari Om. This page contains the names of Lord Muruga. These names are written by Thirumuruga Kribananda Variyar Swamigal. Those who know the meaning of these names, please feel free to update the comments section. The same will be reviewed and updated along with the corresponding names.
- ஓம் அறுமுக சிவமே போற்றி - Lord shiva with 6 faces is Lord Muruga;
- ஓம் அமரர்செய் தவமே போற்றி
- ஓம் அருள் வடிவேலா போற்றி
- ஓம் அருமறை மூலா போற்றி
- ஓம் அரி மருகோனே போற்றி - son in law of Vishnu bhagavAn (ari means Vishnu)
- ஓம் அகத்துறை தேனே போற்றி
- ஓம் அமல சுபோதா போற்றி
- ஓம் அரவிந்த பாதா போற்றி - one with lotus feet
- ஓம் அயனரிக்கு அரியாய் போற்றி - ayan means Brahma, ari means Vishnu
- ஓம் அடியவர்க்கு எளியாய் போற்றி
- ஓம் அம்புயக் கண்ணா போற்றி - lotus eyed
- ஓம் அழகிய வண்ணா போற்றி
- ஓம் அரனருள் பாலா போற்றி - Son of Lord Shiva (aran means Lord Shiva)
- ஓம் அருணைவாழ் சீலா போற்றி
- ஓம் அகரமும் ஆணாய் போற்றி - you are the Beginning
- ஓம் அத்வைத மோனா போற்றி -
- ஓம் அகத்தியர்க்கு அரசே போற்றி
- ஓம் அன்பருள் முரசே போற்றி
- ஓம் அசல நாயகனே போற்றி
- ஓம் அருவுருவானாய் போற்றி
- ஓம் அசரீரியானாய் போற்றி
- ஓம் அருட்பெருஞ் சோதி போற்றி
- ஓம் அருட்பெருங் கடலே போற்றி
- ஓம் அருட்பெருங் குன்றே போற்றி
- ஓம் அருட்பெருந் தவமே போற்றி
- ஓம் அருட்கவி ராஜ போற்றி
- ஓம் அருட்குண நாதா போற்றி
- ஓம் அருட்சிவ களிறே போற்றி
- ஓம் அருட்பெருங்க் கனியே போற்றி
- ஓம் அருட்பெருங் கொண்டல் போற்றி
- ஓம் அருட்பதத் தரசே போற்றி
- ஓம் அக்கமா மணியாய் போற்றி
- ஓம் அவாவறுத் திடுவாய் போற்றி
- ஓம் அன்பு வலைப்படுவாய் போற்றி
- ஓம் அஜபநல முதல்வா போற்றி
- ஓம் அம்பிகை புதல்வா போற்றி
- ஓம் அண்டர்கட் கிறைவா போற்றி
- ஓம் அநாதியாம் குரவா போற்றி
- ஓம் அக்ஷரப் பொருளே போற்றி
- ஓம் அகமகிழ் தெருளே போற்றி
- ஓம் அந்தமில் தலைவா போற்றி
- ஓம் அருமறைப் புலவா போற்றி
- ஓம் அமல வேதியனே போற்றி
- ஓம் அகிலமும் ஆனாய் போற்றி
- ஓம் அசோகநற் பதியே போற்றி
- ஓம் அசைவிலா மதியே போற்றி
- ஓம் அகளங்க நாதா போற்றி
- ஓம் அநபாய நீதா போற்றி
- ஓம் ஆரூரில் அமர்ந்தாய் போற்றி
- ஓம் ஆடலை உகந்தாய் போற்றி
- ஓம் ஆனையின் துணைவா போற்றி
- ஓம் ஆனைமான் கணவா போற்றி
- ஓம் ஆரண முடிவே போற்றி
- ஓம் ஆனந்த வடிவே போற்றி
- ஓம் ஆய்க்குடி அமர்ந்தாய் போற்றி
- ஓம் ஆவினன் குடியாய் போற்றி
- ஓம் ஆசிலா மணியே போற்றி
- ஓம் ஆறுமா முகனே போற்றி
- ஓம் ஆண்டலைக் கொடியாய் போற்றி
- ஓம் ஆளுடை அரசே போற்றி
- ஓம் ஆவரும் துணையே போற்றி
- ஓம் ஆத்திகத் தணைவாய் போற்றி
- ஓம் ஆறாறும் கடந்தாய் போற்றி
- ஓம் ஆற்றினில் வள்ர்ந்தாய் போற்றி
- ஓம் ஆறுபடை வீட்டாய் போற்றி
- ஓம் ஆனந்த நாட்டாய் போற்றி
- ஓம் ஆகமப் பொருளே போற்றி
- ஓம் ஆலயத் தெருளே போற்றி
- ஓம் ஆதாரம் ஆனாய் போற்றி
- ஓம் ஆதி பிரானே போற்றி
- ஓம் இன்ப வாரிதியே போற்றி
- ஓம் இசை உருவாணாய் போற்றி
- ஓம் இரத்திணாசலணே போற்றி
- ஓம் இதாகித மிலனே போற்றி
- ஓம் இருமையும் தருவாய் போற்றி
- ஓம் இமகர உருவாய் போற்றி
- ஓம் இணை இல்லாதவ்ணே போற்றி
- ஓம் இசையில் ஆதவனே போற்றி
- ஓம் இம்மையில் அருள்வாய் போற்றி
- ஓம் இகபர நாதா போற்றி
- ஓம் இனிய சுபோதா போற்றி
- ஓம் இலஞ்சிவாழ் முருகா போற்றி
- ஓம் இந்திரன் மருகா போற்றி
- ஓம் இசைமயத் திருவே போற்றி
- ஒம் இகரநல் உருவே போற்றி
- ஓம் இபமுகன் துணைவா போற்றி
- ஓம் இடரெலாங் களைவாய் போற்றி
- ஓம் இமையவர் பதியே போற்றி
- ஓம் இணையிலா நிதியே போற்றி
- ஓம் இளமையுளானே போற்றி
- ஓம் இருடியர் கோனே போற்றி
- ஓம் இடும்பனுக்கு அருள்வாய் போற்றி
- ஓம் ஈகைசேர் கையாய் போற்றி
- ஓம் ஈக்ஷனை அறுப்பாய் போற்றி
- ஓம் ஈடில்லாதவனே போற்றி
- ஓம் ஈசனல் வாழ்வே போற்றி
- ஓம் ஈராறு தோளாய் போற்றி
- ஓம் உட்பொருளானாய் போற்றி
- ஓம் உரகருக் கருள்வாய் போற்றி
- ஓம் உறந்தையுள் இருந்தாய் போற்றி
- ஓம் உதய சூரியனே போற்றி
- ஓம் உசித ஆரியனே போற்றி
- ஓம் உத்பவம் இல்லாய் போற்றி
- ஓம் உற்றருள் நல்லாய் போற்றி
- ஓம் உயர்சிவ குருவே போற்றி
- ஓம் உம்பர்கள் தருவே போற்றி
- ஓம் உமைமகிழ் மகனே போற்றி
- ஓம் உவமையில் சுகனே போற்றி
- ஓம் உத்தம் குணனே போற்றி
- ஓம் உரக ஆபரணா போற்றி
- ஓம் உலகெலாம் ஆனாய் போற்றி
- ஓம் உக முடிவானாய் போற்றி
- ஓம் ஊர்த்துவ முகனே போற்றி
- ஓம் ஊதை நாயகனே போற்றி
- ஓம் எங்கள் வேலவனே போற்றி
- ஓம் எங்கள் மேலவனே போற்றி
- ஓம் எண் கண்ணில் அமர்ந்தாய் போற்றி
- ஓம் எண்டோளர் புதல்வா போற்றி
- ஓம் எட்டி நற்குடியாய் போற்றி
- ஓம் எம்பெருமானே போற்றி
- ஓம் எங்கும் உள்ளானே போற்றி
- ஓம் எங்கும் இல்லானே போற்றி
- ஓம் எமபயம் தவிர்ப்பாய் போற்றி
- ஓம் எண்கணற் கருள்வாய் போற்றி
- ஓம் என்றும் உள்ளானே போற்றி
- ஓம் எழில்வளர் களனே போற்றி
- ஓம் ஏழிசை யானாய் போற்றி
- ஓம் ஏழ் முகிலானாய் போற்றி
- ஓம் ஏழ் பிறப்பறுப்பாய் போற்றி
- ஓம் ஏழையர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் ஏத்துவார்க் கிறையே போற்றி
- ஓம் ஏதமில் துரையே போற்றி
- ஓம் ஏரக வாசா போற்றி
- ஓம் ஏகவ ரேசா போற்றி
- ஓம் ஏலவார் புயனே போற்றி
- ஓம் ஏமவா லயனே போற்றி
- ஓம் ஏதுவுங் கடந்தாய் போற்றி
- ஓம் ஏழ்தலம் நடந்தாய் போற்றி
- ஓம் ஐயம் இல்லானே போற்றி
- ஓம் ஐயைந்து மானாய் போற்றி
- ஒம் ஐவருக்கு அரசே போற்றி
- ஓம் ஐந்தெழுத்து இறைவா போற்றி
- ஓம் ஒருபரம் பொருளே போற்றி
- ஓம் ஒப்பிலா அருளே போற்றி
- ஓம் ஒன்றிய உணர்வே போற்றி
- ஓம் ஒன்பதின் மணமே போற்றி
- ஓம் ஓமெனு மயனே போற்றி
- ஓம் ஓசையின் பயனே போற்றி
- ஓம் ஓதிமா மலையாய் போற்றி
- ஓம் ஓர்ந்துணர் கலையாய் போற்றி
- ஓம் ஔவை பாடமலா போற்றி
- ஓம் ஔவியம் அழிப்பாய் போற்றி
- ஓம் கந்த நாயகனே போற்றி
- ஓம் கலையுணர் பாலா போற்றி
- ஓம் கருதுவார் தலைவா போற்றி
- ஓம் கங்கையின் பாலா போற்றி
- ஓம் கதிர் வடிவேலா போற்றி
- ஓம் கரிமகள் துணைவா போற்றி
- ஓம் கதிர்காமம் அணைவாய் போற்றி
- ஓம் கதிதரும் பதியே போற்றி
- ஓம் கண்ணிய நிதியே போற்றி
- ஓம் கமல நாயகனே போற்றி
- ஓம் கருது தாயகனே போற்றி
- ஓம் கருணையங் கடலே போற்றி
- ஓம் கவிந்தரு மடலே போற்றி
- ஓம் கருத்துறை மதியே போற்றி
- ஓம் கரையில் வாரிதியே போற்றி
- ஓம் கணியென நின்றாய் போற்றி
- ஓம் கழுக்குன்றம் நின்றாய் போற்றி
- ஓம் கரிமிசை வருவாய் போற்றி
- ஓம் கருணையின் உருவா போற்றி
- ஓம் கலாலய மணியே போற்றி
- ஓம் கண்ணினுக் கணியே போற்றி
- ஓம் கட்டழகு உடையாய் போற்றி
- ஓம் கலியுக வரதா போற்றி
- ஓம் ககன நாயகனே போற்றி
- ஓம் கற்புமை மகனே போற்றி
- ஓம் கார்த்திகை மைந்தா போற்றி
- ஓம் காத்தருள் எந்தாய் போற்றி
- ஓம் காலமும் கடந்தாய் போற்றி
- ஓம் காட்சியில் படர்ந்தாய் போற்றி
- ஓம் காவியம் ஆனாய் போற்றி
- ஓம் காந்தமா மணியே போற்றி
- ஓம் கான்மயில் அரசே போற்றி
- ஓம் காவல்செய் அண்ணல் போற்றி
- ஓம் காமன் மைத்துனனே போற்றி
- ஓம் காரணம் இலனே போற்றி
- ஓம் கிருபைசூழ் சுடரே போற்றி
- ஓம் கிருத்திகை மணியே போற்றி
- ஓம் கிண்கிணி பாதா போற்றி
- ஓம் கிரியுறை நீதா போற்றி
- ஓம் கீர்த்தியின் முடிவே போற்றி
- ஓம் கீதத்தின் வடிவே போற்றி
- ஓம் கீரனுக் கருள்வாய் போற்றி
- ஓம் கீத வினோதா போற்றி
- ஓம் குமாரநல் குருவே போற்றி
- ஓம் குக மலர்த் தருவே போற்றி
- ஓம் குன்றெறி குழகா போற்றி
- ஓம் குரைகழல் அழகா போற்றி
- ஓம் குஞ்சரி நாதா போற்றி
- ஓம் குசுமநல் பாதா போற்றி
- ஓம் குறமகள் பங்கா போற்றி
- ஓம் குணதர துங்கா போற்றி
- ஓம் குராவடி யுறைவாய் போற்றி
- ஓம் குங்கும இறைவா போற்றி
- ஓம் குறையெலாம் களைவாய் போற்றி
- ஓம் குளிர் வயலூரா போற்றி
- ஓம் குறுக்கு நல்துறையாய் போற்றி
- ஓம் குற்றாலத் துறைவாய் போற்றி
- ஓம் குருபர மூர்த்தி போற்றி
- ஓம் குறுமுனி குருவே போற்றி
- ஓம் குடிலையின் பொருளே போற்றி
- ஓம் குன்றுதோறாடீ போற்றி
- ஓம் குழலிசைக் குமரா போற்றி
- ஓம் கூர்வடிவேலா போற்றி
- ஓம் கூதள மாலா போற்றி
- ஓம் கூர்த்தமா மதியே போற்றி
- ஓம் கூனிறைக் கருள்வாய் போற்றி
- ஓம் கெஜநடை யுடையாய் போற்றி
- ஓம் கெடிலநல் வாழ்வே போற்றி
- ஓம் கேகய வீரர் போற்றி
- ஓம் கேன்மையின் சாரா போற்றி
- ஓம் கைதவ மழிப்பாய் போற்றி
- ஓம் கைலையில் உறைவாய் போற்றி
- ஓம் கொங்கண கிரியாய் போற்றி
- ஓம் கொஞ்சுநல் தமிழே போற்றி
- ஓம் கொடைதரு முகிலே போற்றி
- ஓம் கொற்றவ சுதனே போற்றி
- ஓம் கொடிய சூர்பகைவா போற்றி
- ஓம் கொண்டல் நித்திலமே போற்றி
- ஓம் கொற்றமா மயிலா போற்றி
- ஓம் கொன்றை சூடயிலா போற்றி
- ஓம் கோமள மைந்தா போற்றி
- ஓம் கோலவேல் கந்தா போற்றி
- ஓம் கோகனக சரணா போற்றி
- ஓம் கோடி ஆபரணா போற்றி
- ஓம் கோதிலாக் குணனே போற்றி
- ஓம் கோதைசூழ் மணமே போற்றி
- ஓம் கௌசிகற் கருள்வாய் போற்றி
- ஓம் சரவண பவனே போற்றி
- ஓம் ஷததள பதனே போற்றி
- ஓம் ஸதாசிவ சுதனே போற்றி
- ஓம் ஸதானந்த பதியே போற்றி
- ஓம் ஷங்கரி மைந்தா போற்றி
- ஓம் சலச நற்பாதா போற்றி
- ஓம் சமர நற்பதியே போற்றி
- ஓம் சங்கமா நிதியே போற்றி
- ஓம் ஷடக்ஷரப் பொருளே போற்றி
- ஓம் சடானனத் தெருளே போற்றி
- ஓம் ஸகலமும் நீயே போற்றி
- ஓம் சராசரம் நீயே போற்றி
- ஓம் ஸந்ததி தருவா ய் போற்றி
- ஓம் ஸத்குருநாதா போற்றி
- ஓம் ஸஸிக்கருள் நீதா போற்றி
- ஓம் சண்டமா மயிலா போற்றி
- ஓம் சதுர நாயகனே போற்றி
- ஓம் ஷண்முக பதியே போற்றி
- ஓம் ஷட்கிரீவ நிதியே போற்றி
- ஓம் ஷட்கோண பதியே போற்றி
- ஓம் ஜடாதார நிதியே போற்றி
- ஓம் சகசநற் பதியே போற்றி
- ஓம் ஸங்கடம் அழிப்பாய் போற்றி
- ஓம் ஷத்ரு ஸம்ஹாரா போற்றி
- ஓம் சத்தினி பாதா போற்றி
- ஓம் ஸத்துவ குணனே போற்றி
- ஓம் ஷன்மதப் பொருளே போற்றி
- ஓம் ஷட்குண முகனே போற்றி
- ஓம் ஷக்திவேல் முருகா போற்றி
- ஓம் ஸத்திய வடிவே போற்றி
- ஓம் ஸதாசார நிதியே போற்றி
- ஓம் சலசமா முகனே போற்றி
- ஓம் ஸபாபதியானாய் போற்றி
- ஓம் ஸங்கம் வாழ்தேனே போற்றி
- ஓம் ஸ்ங்கீத நாதா போற்றி
- ஓம் ஸர்வ வ்யாபீ போற்றி
- ஓம் ஸந்தானம் அருள்வாய் போற்றி
- ஓம் ஸந்தன புயனே போற்றி
- ஓம் ஸதமகற்கு அருள்வாய் போற்றி
- ஓம் ஸம்ப்ரம உருவே போற்றி
- ஓம் ஸநாதனப் பொருளே போற்றி
- ஓம் ஸமயமும் கடந்தாய் போற்றி
- ஓம் ஸமீரணற்கு அருள்வாய் போற்றி
- ஓம் ஸமரஸம் ஆனாய் போற்றி
- ஓம் ஸம்பந்த மாலே போற்றி
- ஓம் ஸவரியின் கணவா போற்றி
- ஓம் ஸமானமில் குணனே போற்றி
- ஓம் ஷடங்க நூல் தலைவா போற்றி
- ஓம் சடந்தமும் ஆனாய் போற்றி
- ஓம் ஸச்சிதானந்த போற்றி
- ஓம் ஷாந்த மாமணியே போற்றி
- ஓம் சாட்குண்ய நிதியே போற்றி
- ஓம் ஸாரமா மதியே போற்றி
- ஓம் ஸார்ந்தவர்க்கு அருள்வாய்
- ஓம் சாரச நாபா போற்றி
- ஓம் ஸாதுக்கள் பூபா போற்றி
- ஓம் ஸாதனப் பொருளே போற்றி
- ஓம் ஸாத்திய அருளே போற்றி
- ஓம் ஸாம நல்வேதா போற்றி
- ஓம் ஷாமளை பாலா போற்றி - Son of Durga devi; Shyaamalaa means dark.
- ஓம் ஜாதியிலானே போற்றி
- ஓம் ஜானவி பாலா போற்றி - Son of Mother Ganga
- ஓம் சாத்தனுக்கு அருள்வாய் போற்றி
- ஓம் ஸாலோகம் அருள்வாய் போற்றி
- ஓம் ஸாமீபம் தருவாய் போற்றி
- ஓம் ஸாரூபம் அருள்வாய் போற்றி
- ஓம் ஸாயுஜ்யம் தருவாய் போற்றி
- ஓம் ஸாதலைத் தவிர்ப்பாய் போற்றி
- ஓம் ஸாம வேதியனே போற்றி
- ஓம் ஸாற்றுமெய்ப் பொருளே போற்றி
- ஓம் சின்மயானந்தா போற்றி
- ஓம் சிகிவாக எந்தாய் போற்றி
- ஓம் சிதானந்த ரூபா போற்றி
- ஓம் சிரவண ப்ரதாபா போற்றி
- ஓம் சிந்துர நுதலாய் போற்றி
- ஓம் சிராப்பள்ளி உறைவாய் போற்றி
- ஓம் சிவமலை நாதா போற்றி
- ஓம் சிக்கலில் உறைவாய் போற்றி
- ஓம் சிவ சிவ தேவே போற்றி
- ஓம் சிலையுறை கோவே போற்றி
- ஓம் சிங்கார ரூபா போற்றி
- ஓம் சிற்பர பூபா போற்றி
- ஓம் சிதம்பர நாதா போற்றி
- ஓம் சிகாவல கீதா போற்றி
- ஓம் சிவையருள் பாலா போற்றி
- ஓம் சிற்குண வேலா போற்றி
- ஓம் சித்தத்தில் உறைவாய் போற்றி
- ஓம் சிவகுரு பரனே போற்றி
- ஓம் சிதாகாய வடிவே போற்றி
- ஓம் சிற்பர முடிவே போற்றி
- ஓம் சீரலை வாயா போற்றி
- ஓம் சீதல நேயா போற்றி
- ஓம் சீர்த்திகு கேசா போற்றி
- ஓம் சீசைல வாசா போற்றி
- ஓம் சீல விநோதா போற்றி
- ஓம் சீர்கெழு பாதா போற்றி
- ஓம் சுப்பிரமணியா போற்றி
- ஓம் சுரர்புகழ் நயனே போற்றி
- ஓம் சுகம் அருள்பவனே போற்றி
- ஓம் சுபகர சிவனே போற்றி
- ஓம் சுரமகள் தலைவா போற்றி
- ஓம் சுநாத விநோதா போற்றி
- ஓம் சுமங்கல நாதா போற்றி
- ஓம் ஷுத்த அத்விதனே போற்றி
- ஓம் சுகாசன இதனே போற்றி
- ஓம் சுராசுரர்க்கரியாய் போற்றி
- ஓம் சுதந்தரப் பொருளே போற்றி
- ஓம் சுகந்த நற்கடம்பா போற்றி
- ஓம் சுரேந்திரன் பதியே போற்றி
- ஓம் சுத்த சாதகனே போற்றி
- ஓம் சூர சம்மாரா போற்றி
- ஓம் சூலவேல்தீரா போற்றி
- ஓம் செம்மேனி எந்தாய் போற்றி
- ஓம் செய்யவேல் கந்தா போற்றி
- ஓம் செந்திலம் பதியாய் போற்றி
- ஓம் ஜகம்வலம்வந்தாய் போற்றி
- ஓம் ஜகத்குருபரனே போற்றி
- ஓம் செட்டியாம் வரனே போற்றி
- ஓம் செக்கர் வானவனே போற்றி
- ஓம் செயமயில் துரங்கா போற்றி
- ஓம் செச்சையம் புயனே போற்றி
- ஓம் செவ்விய வடிவே போற்றி
- ஓம் செந்தமிழ்க் குகனே போற்றி
- ஓம் செஞ்ச்சொல் விநோதா போற்றி
- ஓம் செங்கனிவாயா போற்றி
- ஓம் செல்லுறழ் கையா போற்றி
- ஓம் செருக்கள தீரா போற்றி
- ஓம் செங்கண்ம கேசா போற்றி
- ஓம் ஜனனமில் ஈசா போற்றி
- ஓம் சென்னிவெற் புறைவாய் போற்றி
- ஓம் சேந்த மகேசா போற்றி
- ஓம் சேவலுங் கொடியாய் போற்றி
- ஓம் சேதுவில் வாழ்வே போற்றி
- ஓம் சேயவ தேவே போற்றி
- ஓம் சேம நன்னிதியே போற்றி
- ஓம் சேகரவீரா போற்றி
- ஓம் சேதனர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் சைதன்யப் பொருளே போற்றி
- ஓம் சைலம்வாழ் தெருளே போற்றி
- ஓம் சொற்பதங் கடந்தாய் போற்றி
- ஓம் ஸ்வரூப விலாஸா போற்றி
- ஓம் சொக்கேசன் பாலா போற்றி
- ஓம் சொலத்தகு சீலா போற்றி
- ஓம் ஸ்வயம் ப்ரகாஷா போற்றி
- ஓம் சொலற்கரும் போதா போற்றி
- ஓம் ஸோமரவி நேத்ரா போற்றி
- ஓம் சோலைமா மலையாய் போற்றி
- ஓம் சோதரர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் ஜோதிமா மணியே போற்றி
- ஓம் சோகம் இலானே போற்றி
- ஓம் சோம நன்னிலையே போற்றி
- ஓம் ஞான பண்டிதனே போற்றி
- ஓம் ஞான வாரிதியே போற்றி
- ஓம் ஞானமா மலையே போற்றி
- ஓம் ஞான பாஸ்கரனே போற்றி
- ஓம் ஞானமா மதியே போற்றி
- ஓம் ஞான ஸ்வரூபா போற்றி
- ஓம் ஞானத்தின் விளைவே போற்றி
- ஓம் ஞானாகரனே போற்றி
- ஓம் ஞானத்தின் முடிவே போற்றி
- ஓம் ஞான தாதாவே போற்றி
- ஓம் ஞான விலாசா போற்றி
- ஓம் ஞானிகள் ஈசா போற்றி
- ஓம் ஞானவேல் முருகா போற்றி
- ஓம் ஞான மகேசா போற்றி
- ஓம் ஞான புரீசா போற்றி
- ஓம் தணிகையம் பதியே போற்றி
- ஓம் தயாபர நிதியே போற்றி
- ஓம் தற்பர விதியே போற்றி
- ஓம் தனமருள் கதியே போற்றி
- ஓம் தவநிலைப் பொருளே போற்றி
- ஓம் தகமைசேர் அருளே போற்றி
- ஓம் தஷ திசை உடையாய் போற்றி
- ஓம் தனிமையை அருள்வாய் போற்றி
- ஓம் தபோதனர்க்கு அரசே போற்றி
- ஓம் தடாதகை மகனே போற்றி
- ஓம் தமிழ்தரு புலவா போற்றி
- ஓம் தத்துவப் பொருளே போற்றி
- ஓம் தட்சிண திசையாய் போற்றி
- ஓம் தமமறு தேவே போற்றி
- ஓம் தவாதருள் கோவே போற்றி
- ஓம் தண்ணருள் முனியே போற்றி
- ஓம் தநுவமர் கரனே போற்றி
- ஓம் தஞ்சமென்று அருள்வாய் போற்றி
- ஓம் தந்தியின் துணைவா போற்றி - beloved of DeivAnai
- ஓம் தழைத்த பூரணனே போற்றி
- ஓம் தாரகப் பொருளே போற்றி
- ஓம் தாருகற் செற்றாய் போற்றி
- ஓம் தாம நல்லுரனே போற்றி
- ஓம் தாண்டவர்க்கு இனியாய் போற்றி
- ஓம் தாதவிழ் கடம்பா போற்றி
- ஓம் தாணுவின் மதலாய் போற்றி
- ஓம் தாபதர்க்கு இறையே போற்றி
- ஓம் தானையின் தலைவா போற்றி
- ஓம் தாயகம் அனையாய் போற்றி
- ஓம் தாயினும் இனியாய் போற்றி - Sweeter than one's Mother
- ஓம் திருமரு கோனே போற்றி - One who is son-in-law of Vishnu bhagavAn
- ஓம் திசைமகிழ் கோனே போற்றி
- ஓம் திங்களுக்கு அருள்வாய் போற்றி
- ஓம் தினைப்புனம் சேர்ந்தாய் போற்றி - one who reached the place of Valli Devi who was guarding the millet fields
- ஓம் திண்புய வேளே போற்றி
- ஓம் திரிமலம் அறுப்பாய் போற்றி - one who destroys the 3 impurities (mala) i.e. aanavam, karmam & maayai.
- ஓம் திரிமூர்த்தி ஆனாய் போற்றி
- ஓம் திவாகரற்கு அரசே போற்றி
- ஓம் திருவருள் வடிவே போற்றி
- ஓம் திருப்பரங் கிரியாய் போற்றி
- ஓம் திருப்புகழ்க்கு இனியாய் போற்றி
- ஓம் திருவடி தருவாய் போற்றி
- ஓம் தீன தயாளா போற்றி
- ஓம் தீர்க்க சுபோதா போற்றி
- ஓம் தீர்த்த விநோதா போற்றி
- ஓம் தீமை இல்லாணே போற்றி
- ஓம் தீக்ஷை செய்குருவே போற்றி
- ஓம் தீராதி தீரா போற்றி
- ஓம் தீவிழி உடையாய் போற்றி
- ஓம் தீவினை தீர்ப்பாய் போற்றி
- ஓம் தீயசூர் செற்றாய் போற்றி
- ஓம் தீந்தமிழ்ப் பொருளே போற்றி
- ஓம் துரகமா மயிலாய் போற்றி
- ஓம் துய்யசீர் அயிலா போற்றி
- ஓம் துகளறு போதா போற்றி
- ஓம் துரந்தர நீதா போற்றி
- ஓம் துடிநடஞ் செய்தாய் போற்றி
- ஓம் துயரறச் செய்வாய் போற்றி - One who cuts all sorrows
- ஓம் துவாதசப் புயத்தாய் போற்றி - One with 12 hands
- ஓம் துங்கமால் மருகா போற்றி
- ஓம் துவந்தனை அழிப்பாய் போற்றி
- ஓம் துப்புநேர் வடிவாய் போற்றி
- ஓம் தூய சித்பரனே போற்றி - Pure consciousness
- ஓம் ஸ்தூல ஸூக்ஷ்மனே போற்றி - He is both gross & subtle
- ஓம் தூண்டாத விளக்கே போற்றி - Self luminous (independent)
- ஓம் தூர்வையை அணிவாய் போற்றி
- ஓம் தென்தமிழ்க் கடவுளே போற்றி
- ஓம் தெள்ளிய மதியே போற்றி
- ஓம் தெங்கடற் பதியாய் போற்றி
- ஓம் தெவ்வடு வேலா போற்றி
- ஓம் தைத்தியர் காலா போற்றி
- ஓம் தையலுக்கு அருள்வாய் போற்றி - One who blesses the jivatamas (feminine gender)
- ஓம் தைரிய நிதியே போற்றி - courageous
- ஓம் தைத்தீரிய பதியே போற்றி
- ஓம் தொண்டர்தம் தலைவா போற்றி - leader of His devotees
- ஓம் தொழுதவர்க்கு இனியாய் போற்றி - sweet & compassionate to the one who worships Him
- ஓம் தொல்பரம் பொருளே போற்றி - ancient & spureme
- ஓம் தொலையாத நிதியே போற்றி - never lost wealth
- ஓம் தொம்பதம் ஆனாய் போற்றி
- ஓம் தொடுகழற் பதனே போற்றி
- ஓம் தொல்வினை அறுப்பாய் போற்றி - One who cuts asunder sanchita karma
- ஓம் தொழு ஸர்ப்ப கிரியாய் போற்றி
- ஓம் தோகைமா மயிலா போற்றி
- ஓம் தோகையர் கணவா போற்றி
- ஓம் தோய்விலாப் பொருளே போற்றி
- ஓம் தோல்வியில் அயிலா போற்றி - Never seen defeat; one with spear;
- ஓம் நவிர நாயகனே போற்றி
- ஓம் நதிதரு மகனே போற்றி - Son of Mother Ganga
- ஓம் நமசிவயப் பொருளே போற்றி
- ஓம் நகமெலாம் உறைவாய் போற்றி
- ஓம் நறைகெழு கடம்பா போற்றி
- ஓம் நல்லவேல் முருகா போற்றி
- ஓம் நக்கனார் புதல்வா போற்றி
- ஓம் நண்பருள் முதல்வா போற்றி - foremost among friends
- ஓம் நம்பன்சற் குருவே போற்றி
- ஓம் நவில்தொறும் இனியாய் போற்றி
- ஓம் நறும்பரா சலனே போற்றி
- ஓம் நற்றமிழ்க் கலையே போற்றி
- ஓம் நனிகந்தன் குடியாய் போற்றி
- ஓம் நள்ளாற்றில் உறைவாய் போற்றி
- ஓம் நவவீரர் பதியே போற்றி
- ஓம் நவரத்ன மார்பா போற்றி
- ஓம் நாகமா மலையாய் போற்றி
- ஓம் நாவலர் தலைவா போற்றி
- ஓம் நாகவா பரணா போற்றி
- ஓம் நாரணன் மருகா போற்றி
- ஓம் நாடிய தருவாய் போற்றி
- ஓம் நான்மறைப் பொருளே போற்றி
- ஓம் நாதத்தின் முடிவே போற்றி
- ஓம் நாயக மணியே போற்றி
- ஓம் நாதாந்த முனிவா போற்றி
- ஓம் நாக பந்தனனே போற்றி
- ஓம் நாடுவார்க்கு இறையே போற்றி
- ஓம் நாவலந் தீவாய் போற்றி
- ஓம் நாற்கவி வரதா போற்றி
- ஓம் நான்முகற்கு அருள்வாய் போற்றி
- ஓம் நாகபரிபாலா போற்றி
- ஓம் நாவினுக்கு இனியாய் போற்றி
- ஓம் நாத்தவறாதாய் போற்றி
- ஓம் நானிலத் தலைவா போற்றி
- ஓம் நாலறம் நவின்றாய் போற்றி
- ஓம் நாகேந்திர பதியே போற்றி
- ஓம் நிர்மல ஆனந்தா போற்றி
- ஓம் நித்திய ஆனந்தா போற்றி
- ஓம் நிதிபதி பதியே போற்றி
- ஓம் நிறைந்த நன்னிதியே போற்றி
- ஓம் நிரஞ்சன தேவே போற்றி
- ஓம் நிஷ்கள கோவே போற்றி
- ஓம் நிர்ப்பய மணியே போற்றி
- ஓம் நிராகுல முனியே போற்றி
- ஓம் நிஜானந்த பரமே போற்றி
- ஓம் நிலைத்த கோபுரமே போற்றி
- ஓம் நிரந்தர சுகமே போற்றி
- ஓம் நிர்விகாரப் பொருளே போற்றி
- ஓம் நிரவய அருளே போற்றி
- ஓம் நிர்க்குண வேளே போற்றி
- ஓம் நிராதார மூர்த்தி போற்றி
- ஓம் நிலாவெனக் குளிர்ந்தாய் போற்றி
- ஓம் நிஷ்டையில் வருவாய் போற்றி
- ஓம் நிசாசரர் பகையே போற்றி
- ஓம் நியதிக்கும் நியதீ போற்றி
- ஓம் நிகமநூல் நீதா போற்றி
- ஓம் நீதிமா மணியே போற்றி
- ஓம் நீரஜ நாபா போற்றி
- ஓம் நீடிய புகழாய் போற்றி
- ஓம் நீப மாலையனே போற்றி
- ஓம் நீலமா மயிலாய் போற்றி
- ஓம் நீக்கரும் பொருளே போற்றி
- ஓம் நுண்ணிய மதியே போற்றி
- ஓம் நுதல்விழி வந்தாய் போற்றி
- ஓம் நூலறி புலவா போற்றி
- ஓம் நூற்சொலும் தலைவா போற்றி
- ௐம் நெறியருள் சரதா போற்றி
- ஓம் நெற்றிநாட் டத்தாய் போற்றி
- ஓம் நேர்மையின் விளைவே போற்றி
- ஓம் நேம வாரிதியே போற்றி
- ஓம் நைந்தவர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் நைமிசத் துறைவாய் போற்றி
- ஓம் நொய்யவரூபா போற்றி
- ஓம் நோன்மைப் பிரதாபா போற்றி
- ஓம் நோவகல் மணியே போற்றி
- ஓம் நோக்குதற்கு அரியாய் போற்றி
- ஓம் பன்னிரு புயனே போற்றி
- ஓம் பராபர மயனே போற்றி
- ஓம் பத்தியில் மணியே போற்றி
- ஓம் பராசல பதியே போற்றி
- ஓம் பவள ஸ்வரூபா போற்றி
- ஓம் பரகதி தருவாய் போற்றி
- ஓம் பரஞ்சுடர் உருவே போற்றி
- ஓம் பனிமலை உறைவாய் போற்றி
- ஓம் பதுமமேல் உறைவாய் போற்றி
- ஓம் பங்கயற்கு அரியாய் போற்றி
- ஓம் பரமநாயகனே போற்றி
- ஓம் பற்றிலாதவனே போற்றி
- ஒம் பன்னகா பரணா போற்றி
- ஓம் பச்சைமா மலையாய் போற்றி
- ஓம் பதாம்புயம் அருள்வாய் போற்றி
- ஓம் பரிமள நீபா போற்றி
- ஓம் பதினெட்டுக் கண்ணா போற்றி
- ஓம் பவப்பிணி தவிர்ப்பாய் போற்றி
- ஓம் பவதேவ சுதனே போற்றி
- ஓம் பகைகடிபவனே போற்றி
- ஓம் பழனிவாழ் பரனே போற்றி
- ஓம் பழமைக்கும் பழையாய் போற்றி
- ஓம் பழம் பொருளானாய் போற்றி
- ஓம் பழத்தினுள் சுவையே போற்றி
- ஓம் பதுமநல் முகத்தாய் போற்றி
- ஓம் பதுமமார் பாதா போற்றி
- ஓம் பருணிதர் தலைவா போற்றி
- ஓம் பத்தருள் உறைவாய் போற்றி
- ஓம் பசிப்பிணி களைவாய் போற்றி
- ஓம் பதமெலாம் தருவாய் போற்றி
- ஓம் பரிதியின் தலைவா போற்றி
- ஓம் பனிமதி யனையாய் போற்றி
- ஓம் பலகலை உணர்ந்தாய் போற்றி
- ஓம் பரந்தாமன் மருகா போற்றி
- ஓம் பரசிவ குருவே போற்றி
- ஓம் பற்றறுப்பவனே போற்றி
- ஓம் பச்சிலைக் கருள்வாய் போற்றி
- ஓம் பாவகிக் கருள்வாய் போற்றி
- ஓம் பாதபங்கயனே போற்றி
- ஓம் பாடலுக் கினியாய் போற்றி
- ஓம் பாரெலாம் பரந்தாய் போற்றி
- ஓம் பாவலர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் பாச நாசகனே போற்றி
- ஓம் பாவனைக்கு அரியாய் போற்றி
- ஓம் பாவங்கள் பொறுப்பாய் போற்றி
- ஓம் பாரிடம் உடையாய் போற்றி
- ஓம் பாலாபிஷேகா போற்றி
- ஓம் பாரகம் ஆனாய் போற்றி
- ஓம் பாஸ்கரன் ஆனாய் போற்றி
- ஓம் பாரொடு விண்ணாய் போற்றி
- ஓம் பாசறை இருந்தாய் போற்றி
- ஓம் பாடுவார்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் பிரான்மலை இருந்தாய் போற்றி
- ஓம் பிஞ்ஞகன் மகனே போற்றி
- ஓம் பிரம நாயகனே போற்றி
- ஓம் பிரமையை அழிப்பாய் போற்றி
- ஓம் பிதாமகற்கு அரியாய் போற்றி
- ஓம் பிறப்பிறப்பில்லாய் போற்றி
- ஓம் பிறவியை ஒழிப்பாய் போற்றி
- ஓம் பீடருள் பிரானே போற்றி
- ஓம் பீதக உடையாய் போற்றி
- ஓம் பீம சந்ததியே போற்றி
- ஓம் புராதன புனிதா போற்றி
- ௐம் புங்கவர் தலைவா போற்றி
- ஓம் புனித வேலவனே போற்றி
- ஓம் புருஷார்த்தம் அருள்வாய் போற்றி
- ஓம் புகழ்பெறு புராணா போற்றி
- ஓம் புராணங்கள் தலைவா போற்றி
- ஓம் புதந்தனக்கு அருள்வாய் போற்றி
- ஓம் புத்தியில் உறைவாய் போற்றி
- ஓம் புருகூதற்கு அருள்வாய் போற்றி
- ஓம் புலோமசை மருகா போற்றி - pulOmasai means IndrAni (Mrs.Indra) - The name means, son-in-law of Indrani. Because Lord Muruga married DevayAni who is considered to be the daughter of Indra also.
- ஓம் புரந்தரற்கு இனியாய் போற்றி
- ஓம் புவனங்கள் கடந்தாய் போற்றி
- ஓம் புவன சுந்தரனே போற்றி
- ஓம் புண்டர நுதலாய் போற்றி
- ஓம் புண்ணியப் பொருளே போற்றி
- ஓம் புத்தமுதானாய் போற்றி
- ஓம் புதுமைக்கும் புதிதாய் போற்றி
- ஓம் பூரணானந்தா போற்றி
- ஓம் பூதிசேர் நுதலாய் போற்றி
- ஓம் பூசுரர் பதியே போற்றி
- ஓம் பூதமா பதியே போற்றி
- ஓம்பூவலர் பதனே போற்றி
- ஓம் பூமகட்கு அருள்வாய் போற்றி
- ஓம் பூவண முறைவாய் போற்றி
- ஓம் பூந்துறை நாடா போற்றி
- ஓம் பூரண சுகனே போற்றி
- ஓம் பூரணே சுரனே போற்றி
- ஓம் பூத வாகனனே போற்றி
- ஓம் பூஜிப்பார் பொருளே போற்றி
- ஓம் பூர்த்தியாம் பொருளே போற்றி
- ஓம் பூவணத் தவனே போற்றி
- ஓம் பூரணப் பொருளே போற்றி
- ஓம் பூரியர்க்கு அரியாய் போற்றி
- ஓம் பூத நாயகனே போற்றி
- ஓம் பூணெலாம் புனைந்தாய் போற்றி
- ஓம் பூத்தவி சிறுப்பாய் போற்றி
- ஓம் பூதிசா தனனே போற்றி
- ஓம் பெரிய பிரானே போற்றி
- ஓம் பெருமையின் முடிவே போற்றி
- ஓம் பேரின்பத் தேனே போற்றி
- ஓம் பேறெலாம் அருள்வாய் போற்றி
- ஓம் பேசுதற்கு அரியாய் போற்றி
- ஓம் பேசாத இன்ப போற்றி
- ஓம் பேதங்கள் கடந்தாய் போற்றி
- ஓம் பேணுதற்கு இனியாய் போற்றி
- ஓம் பேணிய தருவாய் போற்றி
- ஓம் பேய்களைத் தவிர்ப்பாய் போற்றி
- ஓம் பேச்சுக்குள் நின்றாய் போற்றி
- ஓம் பேற்றுக்குள் பேறே போற்றி
- ஓம் பைந்நாகம் பூண்டாய் போற்றி
- ஓம் பைங்கிளிக்கு அருள்வாய் போற்றி
- ஓம் பொன்னுரு வானாய் போற்றி
- ஓம் பொறிபுலன் கடந்தாய் போற்றி
- ஓம் பொறுமையின் இருப்பே போற்றி
- ஓம் பொருகழல் புனைந்தாய் போற்றி
- ஓம் பொறாமையில் நிலவாய் போற்றி
- ஓம் பொதிகையில் அமர்ந்தாய் போற்றி
- ஓம் பொருனைமா நதியாய் போற்றி
- ஓம் பொன்னிசூழ் நிதியாய் போற்றி
- ஓம் போத தேசிகனே போற்றி
- ஓம் போற்றுதற்கு இனியாய் போற்றி
- ஓம் போகங்கள் தருவாய் போற்றி
- ஓம் போகி நாயகனே போற்றி
- ஓம் போதாந்த நாதா போற்றி
- ஓம் போர்மயில் வாகா போற்றி
- ஓம் போக்கியப் பொருளே போற்றி
- ஓம் போத சுந்தரனே போற்றி
- ஓம் போர்முரசு அறைந்தாய் போற்றி
- ஓம் போக்கு வரவு இல்லாய் போற்றி
- ஓம் பௌதிகம் ஆனாய் போற்றி
- ஓம் பௌதிகம் இல்லாய் போற்றி
- ஓம் மயூர வாகனனே போற்றி
- ஓம் மயிலம் வாழ்பவனே போற்றி
- ஓம் மதிவளர் மணியே போற்றி
- ஓம் மகாமறைப் பொருளே போற்றி
- ஓம் மறைகளுக்கு எட்டாய் போற்றி
- ஓம் மந்திர உருவே போற்றி
- ஓம் மகேந்திரத்து உறைவாய் போற்றி
- ஓம் மலர்மிசை இருந்தாய் போற்றி
- ஓம் மறமகள் மகிண போற்றி
- ஓம் மகதேவன் மைந்தா போற்றி
- ஓம் மதுசூதன் மருகா போற்றி
- ஓம் மதிசூடி குருவே போற்றி
- ஓம் மருவெட்சி புனைந்தாய் போற்றி
- ஓம் மகிதலத்து அருள்வாய் போற்றி
- ஓம் மடுவினில் உதித்தாய் போற்றி
- ஓம் மட்டவிழ் கடம்பா போற்றி
- ஓம் மதனன் மைத்துனனே போற்றி
- ஓம் மத்தளம் இசைத்தாய் போற்றி
- ஓம் மதுவளர் தாராய் போற்றி
- ஓம் மதிப்பவர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் மதிதனில் உறைவாய் போற்றி
- ஓம் மதம்பொழி களிற்றாய் போற்றி
- ஓம் மருதமலை அரசே போற்றி
- ஓம் மருதாசல பதியே போற்றி
- ஓம் மருகலில் அருள்வாய் போற்றி
- ஓம் மலைவளர் மணியே போற்றி
- ஓம் மன்னிய மகிபா போற்றி
- ஓம் மன்னுயிர்க்கு உயிரே போற்றி
- ஓம் மறுவறு குகனே போற்றி
- ஓம் மனமொழி கடந்தாய் போற்றி
- ஓம் மகத்தினைக் காப்பாய் போற்றி
- ஓம் மலையினைப் பிளந்தாய் போற்றி
- ஓம் மறைந்தருள் புரிவாய் போற்றி
- ஓம் மாயவன் மருகா போற்றி
- ஓம் மாமயில் வாசா போற்றி
- ஓம் மாகத்தின் முடிவே போற்றி
- ஓம் மாற்றிலாப் பொன்னே போற்றி
- ஓம் மாமணி மார்பா போற்றி
- ஓம் மாசிலா மணியே போற்றி
- ஓம் மாறனுக்கு அருள்வாய் போற்றி
- ஓம் மாரன் மைத்துனனே போற்றி
- ஓம் மாத்ஸர்யம் அறுப்பாய் போற்றி
- ஓம் மாதனம் தருவாய் போற்றி
- ஓம் மாறிலாப் பொருளே போற்றி
- ஓம் மாதின்கை தந்தாய் போற்றி
- ஓம் மாசங்கம் இருந்தாய் போற்றி
- ஓம் மாதேவன் மைந்தா போற்றி
- ஓம் மண்டவர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் மாமலர்ச் சரணா போற்றி
- ஓம் மாக்கடல் தடிந்தாய் போற்றி
- ஓம் மாவீர வீரா போற்றி
- ஓம் மான்மகள் மகிண போற்றி
- ஓம் மாசெய துங்கா போற்றி
- ஓம் மாமரம் அறுத்தாய் போற்றி
- ஓம் மாலயற்கு அரியாய் போற்றி
- ஓம் மாமேரு மலையாய் போற்றி
- ஓம் மின்னயில் வேலா போற்றி
- ஓம் மிதாமிதம் இல்லாய் போற்றி
- ஓம் மிளிர்மணிப் பூணாய் போற்றி
- ஓம் மிக்க மேலவனே போற்றி
- ஓம் மீனவற்கு அருள்வாய் போற்றி
- ஓம் மீசுர நிதியே போற்றி
- ஓம் முத்திக்கு வித்தே போற்றி
- ஓம் முருக நாயகனே போற்றி
- ஓம் முத்துக் குமாரா போற்றி
- ஓம் முனிவரர் தலைவா போற்றி
- ஓம் முறையருள் முனிவா போற்றி
- ஓம் முகரிமைப் பொருளே போற்றி
- ஓம் முகளித மலராய் போற்றி
- ஓம் முதிராத முதல்வா போற்றி
- ஓம் முத்தருள் அமர்ந்தாய் போற்றி
- ஓம் முத்தவாணகையாய் போற்றி
- ஓம் முகமாறு முடையாய் போற்றி
- ஓம் முக்கணன் புதல்வா போற்றி
- ஓம் முட்டைப்பேர் சொற்றாய் போற்றி
- ஓம் முத்தமிழ் வள்ளால் போற்றி
- ஓம் முத்திக்கு முதலே போற்றி
- ஓம் முற்றுமாய் நின்றாய் போற்றி
- ஓம் முறுவல்செய் முகத்தாய் போற்றி
- ஓம் முன்றில்முன் வருவாய் போற்றி
- ஓம் முதன்மைசேர் புலவா போற்றி
- ஓம் முழுமுதற் பொருளே போற்றி
- ஓம் முழுதொருங் குணர்ந்தாய் போற்றி
- ஓம் முசிப்பெலாம் அறுப்பாய் போற்றி
- ஓம் முத்திதந்து அருள்வாய் போற்றி
- ஓம் முருகம்மைக்கு அருள்வாய் போற்றி
- ஓம் முற்றறிந்தவனே போற்றி
- ஓம் மும்மையும் தருவாய் போற்றி
- ஓம் முதற்பொரு ளானாய் போற்றி
- ஓம் முன்னையா மரசே போற்றி
- ஓம் முன்னிய தருவாய் போற்றி
- ஓம் முயற்சியில் விளைவாய் போற்றி
- ஓம் முருகாற்றுப் படையாய் போற்றி
- ஓம் முதிர்பழச் சுவையே போற்றி
- ஓம் மும்மூர்த்தி முதல்வா போற்றி
- ஓம் முக்கனி யனையாய் போற்றி
- ஓம் முச்சுடர்க் கண்ணா போற்றி
- ஓம் முத்தழல் ஆனாய் போற்றி
- ஓம் முனிவிலா தவனே போற்றி
- ஓம் முன்னான்கு புயத்தாய் போற்றி
- ஓம் மூவரும் ஆனாய் போற்றி
- ஓம் மூதறி புலவ போற்றி
- ஓம் மூலமந்திரமே போற்றி
- ஓம் மூலமாய் நின்றாய் போற்றி
- ஓம் மூகனாய் வந்தாய் போற்றி
- ஓம் மூவருக்கு அருள்வாய் போற்றி
- ஓம் மூப்பிலா இளையாய் போற்றி
- ஓம் மூள்வினை யருப்பாய் போற்றி
- ஓம் மூர்த்தியாங் கீர்த்தி போற்றி
- ஓம் மூவிரு முகணே போற்றி
- ஓம் மூவாறு கண்ணா போற்றி
- ஓம் மூரிவேற் கரத்தாய் போற்றி
- ஓம் மூவிரு குணனே போற்றி
- ஓம் மூவலூர் உறைவாய் போற்றி
- ஓம் மூட்டழல் உருவா போற்றி
- ஓம் மூவாத முதல்வா போற்றி
- ஓம் மூவிரு சமய போற்றி
- ஓம் மூவிரு திசையாய் போற்றி
- ஓம் மூர்க்கரை அழிப்பாய் போற்றி
- ஓம் மெய்ப்பொருளானாய் போற்றி
- ஓம் மெங்குழல் இசைப்பாய் போற்றி
- ஓம் மெல்லிசைப் பொருளே போற்றி
- ஓம் மெய்யுணர் வளிப்பாய் போற்றி
- ஓம் மெத்தென இருப்பாய் போற்றி
- ஓம் மெலிந்தவர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் மெய்த்தவத் தவனே போற்றி
- ஓம் மெய்ஞ்ஞான உருவே போற்றி
- ஓம் மேதகு பொருளே போற்றி
- ஓம் மேவலர்க் கிடியே போற்றி
- ஓம் மேலவர்க்கு இனியாய் போற்றி
- ஓம் மேகமே யனையாய் போற்றி
- ஓம் மெருவில் வாழ்வாய் போற்றி
- ஓம் மேனையின் பேரா போற்றி
- ஓம் மேலைவயலூரா போற்றி
- ஓம் மேற்றளி யுறைவாய் போற்றி
- ஓம் மேற்றிசைக் கதிபா போற்றி
- ஓம் மேம்படு பெருமா போற்றி
- ஓம் மேன்மையைத் தருவா போற்றி
- ஓம் மேவுமா ரூரா போற்றி
- ஓம் மைநிகர் மயிலா போற்றி
- ஓம் மைவளர் கண்ணா போற்றி
- ஓம் மொழியருள் முதல்வா போற்றி
- ஓம் மொழித்துணை முருக போற்றி
- ஓம் மொழிக்கு முன்னானாய் போற்றி
- ஓம் மொய்ம்மைசேர் தோளா போற்றி
- ஓம் மோனத்தின் முதலே போற்றி
- ஓம் மோக்ஷ பதேந்த்ரா போற்றி
- ஓம் மோன நாயகனே போற்றி
- ஓம் மோகத்தை யறுப்பாய் போற்றி
- ஓம் மௌனியர் பதமே போற்றி
- ஓம் யதிகளுக் கரசே போற்றி
- ஓம் யதார்த்தமானவனே போற்றி
- ஓம் யந்திரத் துறைவாய் போற்றி
- ஓம் யாவையும் ஆனாய் போற்றி
- ஓம் யாவையும் இல்லாய் போற்றி
- ஓம் யாழிசை வல்லாய் போற்றி
- ஓம் யுத்த நல்வீரா போற்றி
- ஓம் யுத்திகட்கு எட்டாய் போற்றி
- ஓம் யுகமுடி வானாய் போற்றி
- ஓம் யுகளசே வடிவாய் போற்றி
- ஓம் யூக நாயகனே போற்றி
- ஓம் யோக நாயகனே போற்றி
- ஓம் யோகியர் உளத்தாய் போற்றி
- ஓம் யோக நன்னிதியே போற்றி
- ஓம் யோக்கியர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் ரஞ்சித முருகா போற்றி
- ஓம் ரமாமகிழ் மருகா போற்றி
- ஓம் ரம்மியப் பொருளே போற்றி
- ஓம் ரணவீர தீரா போற்றி
- ஓம் ரதாரூட வீரா போற்றி
- ஓம் ராமன்தன் மருகா போற்றி
- ஓம் ராகமிலானே போற்றி
- ஓம் ராகசொ ரூபா போற்றி
- ஓம் ராப்பகல் இல்லாய் போற்றி
- ஓம் ராகவற்கு இனியா போற்றி
- ஓம் ருணமெலாம் ஒழிப்பாய் போற்றி
- ஓம் ருத்திரற்கு இனியாய் போற்றி
- ஓம் ரூபலாவண்ய போற்றி
- ஓம் ரூபமிலானே போற்றி
- ஓம் ரோக நாசகனே போற்றி
- ஓம் ரோகமிலானே போற்றி
- ஓம் லக்ஷ்மிக்கு அருள்வாய் போற்றி
- ஓம் லலாட நேத்திரனே போற்றி
- ஓம் லலிதையின் சுதனே போற்றி
- ஓம் லங்கையில் நின்றாய் போற்றி
- ஓம் லாபங்கள் தருவாய் போற்றி
- ஓம் லிங்க நாயகனே போற்றி
- ஓம் லீலா விநோதா போற்றி
- ஓம் லோக நாயகனே போற்றி
- ஓம் லோக சுந்தரனே போற்றி
- ஓம் வள்ளி மணாலா போற்றி
- ஓம் வரதவேல்முருகா போற்றி
- ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
- ஓம் வள்ளிவெற்பு அமர்ந்தாய் போற்றி
- ஓம் வடிவழகு உடையாய் போற்றி
- ஓம் வன்னியில் வந்தாய் போற்றி
- ஓம் வகுத்தருள் செய்வாய் போற்றி
- ஓம் வசீகரப் பொருளே போற்றி
- ஓம் வசுக்களுக்கு அருள்வாய் போற்றி
- ஓம் வதனம் ஆறுடையாய் போற்றி
- ஓம் வலிவலம் நின்றாய் போற்றி
- ஓம் வயற்பதி அமர்ந்தாய் போற்றி
- ஓம் வளமருத கிரியாய் போற்றி
- ஓம் வரூதினி தலைவா போற்றி
- ஓம் வண்டமிழ் விநோதா போற்றி
- ஓம் வனவல்லி பாகா போற்றி
- ஓம் வனசரனானாய் போற்றி
- ஓம் வள்ளலே எந்தாய் போற்றி
- ௐம் வணங்குவார்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் வற்றாத அருளே போற்றி
- ஓம் வசந்த மாருதமே போற்றி
- ஓம் வளரிள மதியே போற்றி
- ஓம் வண்டுறை கடம்பா போற்றி
- ஓம் வந்தனைக்கு உரியாய் போற்றி
- ஓம் வரோதய வள்ளல் போற்றி
- ஓம் வல்லமை தருவாய் போற்றி
- ஓம் வல்லத்தில் உறைவாய் போற்றி
- ஓம் வதுவைதா தாவே போற்றி
- ஓம் வளிவெளி யானாய் போற்றி
- ஓம் வாலசுந்தரனே போற்றி
- ஓம் வாகுலே யபிரான் போற்றி
- ஓம் வதனை தவிர்ப்பாய் போற்றி
- ஓம் வாசவற்கு அருள்வாய் போற்றி
- ஓம் வாகை சேவலனே போற்றி
- ஓம் வாமதேவாசா போற்றி
- ஓம் வான நாயகனே போற்றி
- ஓம் வான்மகள் கணவா போற்றி
- ஓம் வாய்மையின் வடிவே போற்றி
- ஓம் வாரணன் துணைவா போற்றி
- ஓம் வாரணன் மருகா போற்றி
- ஓம் வாரண மூர்ந்தோய் போற்றி
- ஓம் வாசமார் கடம்பா போற்றி
- ஓம் வாட்போக்கி யமர்ந்தாய்
- ஓம் வாகுவில் உடையாய் போற்றி
- ஓம் வானதி மகனே போற்றி
- ஓம் வாட்டடங் கண்ணா போற்றி
- ஓம் வாதவூர் நின்றாய் போற்றி
- ஓம் வாசிமா மயிலா போற்றி
- ஓம் வாமையின் சுதனே போற்றி
- ஓம் வாழ்வருள் வரதா போற்றி
- ஓம் வாரமேலவனே போற்றி
- ஓம் விமல நாயகனே போற்றி
- ஓம் விப்பிர மணியே போற்றி
- ஓம் விசாகநல் முருகா போற்றி
- ஓம் விமலையின் புதல்வா போற்றி
- ஓம் விசைபெறு மயிலா போற்றி
- ஓம் விடைநடை யுடையாய் போற்றி
- ஓம் விநாயகன் துணைவா போற்றி
- ஓம் விரதியர் தலைவா போற்றி
- ஓம் விநோத சுரேசா போற்றி
- ஓம் விண்டுவின் மருகா போற்றி
- ஓம் விஷ்வ ரூபா போற்றி
- ஓம் விஷ்வாதீதா போற்றி
- ஓம் விண்ணவர் அதிபா போற்றி
- ஓம் வித்தாக வடிவே போற்றி
- ஓம் விஞ்சையர் தேவே போற்றி
- ஓம் விரதநன் னெறியாய் போற்றி
- ஓம் வீரநல் வாழ்வே போற்றி
- ஓம் வீராதி வீரா போற்றி
- ஓம் வீறுடை வேலா போற்றி
- ஓம் வீமது ரங்கா போற்றி
- ஓம் வீயாத வேளே போற்றி
- ஓம் வீடுபேறுடையாய் போற்றி
- ஓம் வீசுமென் வளியே போற்றி
- ஓம் வெற்றிவேல் முருகா போற்றி
- ஓம் வெண்திரு நீற்றாய் போற்றி
- ஓம் வெட்சியைப் புனைந்தாய் போற்றி
- ஓம் வெள்ளிய நகையாய் போற்றி
- ஓம் வேண்டிய தருவாய் போற்றி
- ஓம் வேதநாயகனே போற்றி
- ஓம் வேதியர் தலைவா போற்றி
- ஓம் வேங்கடம் அமர்ந்தாய் போற்றி
- ஓம் வேதனை தவிர்ப்பாய் போற்றி
- ஓம் வேதாந்த வாழ்வே போற்றி
- ஓம் வேதநல் வித்தே போற்றி
- ஓம் வேள்பரம் பொருளே போற்றி
- ஓம் வேலமர் கரத்தாய் போற்றி
- ஓம் வேதவிற் பனனே போற்றி
- ஓம் வேதவுட் பொருளே போற்றி
- ஓம் வேதத்தின் முடிவே போற்றி
- ஓம் வேய்ங்குழல் இசைப்பாய் போற்றி
- ஓம் வேதவேத்தியனே போற்றி
- ஓம் வேதமும் கடந்தாய் போற்றி
- ஓம் வேகத்தை ஒழிப்பாய் போற்றி
- ஓம் வேட்கள நாதா போற்றி
- ஓம் வேழமேல் வருவாய் போற்றி
- ஓம் வேட்டுவ னானாய் போற்றி
- ஓம் வைகரி கடந்தாய் போற்றி
- ஓம் வைவடிவேலா போற்றி
- ஓம் வைத்திய நாதா போற்றி
- ஓம் வையத்துள் வந்தாய் போற்றி
- ஓம் வைப்பெறு நிதியே போற்றி
- ஓம் வைதவர்க்கும் அருள்வாய் போற்றி
- ஓம் வைரவேல் வரதா போற்றி
- ஓம் வௌவுறா நிதியே போற்றி
- ஓம் க்ஷணத்தினில் வருவாய் போற்றி
- ஓம் க்ஷணபங்க பதியே போற்றி
- ஓம் க்ஷரமிலாப் பரனே போற்றி
- ஓம் க்ஷத்ர சோபிதனே போற்றி
- ஓம் க்ஷமா வடிவானாய் போற்றி
Comments
Post a Comment