Glory of Lord Ganesha - வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
Chinmaya Vettri Vinayaka, Thamaraipakkam |
மரத்தடியோ, நதிகரையோ, வீதியோரமோ போதும்!
மெல்லிடையோ, சங்குக்கழுத்தோ, செந்தோளோ வேண்டாம்
யானை முகமும், தொந்தி வயிறும், ஷூர்ப்பகர்ணங்களும் நம்மை ஈர்க்கும்!
பஞ்சலோஹமோ, பொற்சிலையோ, வெள்ளிக்காப்போ வேண்டாம்
பஞ்சலோஹமோ, பொற்சிலையோ, வெள்ளிக்காப்போ வேண்டாம்
களிமண்ணுள், மிதமஞ்சளுள், கருங்கல்லுள் ஒளி மிளிரும்!
சீறும் நந்தி, கர்ஜிக்கும் சிம்மம், ஆடும் மயில் வேண்டாம்
சின்னந்சிறு மூஷிகமே கொண்டு சேர்க்கும் நம்மையெல்லாம்.
சீறும் நந்தி, கர்ஜிக்கும் சிம்மம், ஆடும் மயில் வேண்டாம்
சின்னந்சிறு மூஷிகமே கொண்டு சேர்க்கும் நம்மையெல்லாம்.
கடுந்தவமோ, நெடுந்தியானமோ, ப்ராணாயாமமோ சிரமம்தான்
தோப்புக்கர்ணம் ஒன்றே போதும் உயிரும் அருளும் பெருகும்.
தோப்புக்கர்ணம் ஒன்றே போதும் உயிரும் அருளும் பெருகும்.
Comments
Post a Comment